சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். அங்கிருந்தவாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.