ஜெனிவா: உலக அளவில், 4 லட்சம் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கொலைவெறியை சமாளிக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்ப, வெறும் ஊரடங்கு மட்டும் போதாது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.